![]() |
தற்போது கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (11) நிகவெரட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், 900 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தற்போதைய நிலையில் இலங்கைக்குள் மோசடி மற்றும் ஊழல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
