கொழும்பு துறைமுக நகரத்தில் (Colombo Port City) பணியாளர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, கூர்மையான ஆயுதத்தால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
