Our Feeds


Tuesday, October 13, 2026

Zameera

வெலிகம பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வி

 

(எம்.ஆர்.எம்.வசீம்)


தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தின்  கீழ் இயங்கிவரும் வெலிகம பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம்  மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.


வெலிகம பிரதேச சபையின் 2027ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் கூட்டம்  பிரதேச சபை தலைவர் சின்தக ஹேவாபத்திரண தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது அடுத்த வருடத்துக்கான வரலு செலவு திட்ட அறிக்கையை பிரதேச சபையின் தலைவர் முன்வைத்தார்.


இதனையடுத்து, வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. இதன்போது வரவு செலவு திட்ட பிரேரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வஜன அதிகாரம் கட்சியின் புஷ்பகுமார பெட்டகே மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ராெபின் சங்க ஆகியோர் வரவேட்டிருந்தனர்.


இருந்தபோதும் , அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள  இறுதியாக வாக்களிப்பு இடம்பெற்றது. வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட குழுவினர் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக  22 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக 23 வாக்குகளையும் அளித்தனர். 


அதன் பிரகாரம்  வெலிகம பிரதேச சபையின்  2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »