(எஸ். சினீஸ் கான்)
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் மேதகு யாசர் பின் அப்துல்ரஹ்மான் அல்-ஹாஸ்மி அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (08) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கைக்கு சவூதி அரேபியா தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகள், ஆதரவுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், சவூதி அரேபியா - இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், இராஜதந்திர ரீதியிலான விடயங்கள் உள்ளிட்ட பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.
