Our Feeds


Monday, October 12, 2026

Zameera

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை புதிய உறுப்பினராக அச்சு முகம்மது ஹனீதா சத்தியப்பிரமாணம்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக அச்சு முகம்மது ஹனீதா, கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னிலையில் இன்று (12) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகித்து வந்த எம்.ஐ. பாத்திமா சாபியா, கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்கத் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்துக்கு சம்மாந்துறை மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைய அச்சு முகம்மது ஹனீதா புதிய உறுப்பினராகக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், உயர் பீட உறுப்பினர்களான ஏ.எம். அஸிஸ், சட்டத்தரணி எம்.எம். ஜாவ்பீர், பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் மற்றும் பெண் உறுப்பினர்களான எஸ்.எம். சித்தி நிலுபா, எம்.சி. நவ்ஷா, ஏ.ஐ. நூன் ரிபானா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »