Our Feeds


Tuesday, October 13, 2026

ShortNews

புத்த சாசனத்திற்கு முன்னுரிமையைப் பெற்றுக் கொடுக்கும் நாட்டில் நடைபெறும் விடயங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாதுள்ளது - சஜித்!


பிக்குவின் காவி உடையை களைவதற்கு சாதாரண மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சம்புத்த சாசனத்திற்கு முன்னுரிமையைப் பெற்றுக் கொடுக்கும் நமது நாட்டில் தற்போது நடைபெறும் விடயங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாதுள்ளது. புத்த சாசனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் முன்னுரிமை இன்று நடைமுறைப்படுத்தப்படாமையினால், அரசியலமைப்பின் உயரிய சட்டத்தின் சில விதிகள், ஒழுங்கு விதிகள் மற்றும் வழிமுறைகள் தற்காலத்திற்கு ஏற்றாற் போல் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கம்புருபிட்டிய சப்புகொட இலங்கம்கொட புராண ராஜமகா விகாரை உள்ளிட்ட விகாரைகளின் விகாராதிபதியும், மகா விகார வம்ச ஸ்யாமோபாலி மகா நிகாயவின் ஸ்ரீ ரோஹண பிரிவின் சிரேஷ்ட அனுநாயக்கர், சத்தர்ம கீர்த்தி, ஸ்ரீ சுகததம்ம, அக்மகம பண்டித சாஸ்திரபதி சங்கைக்குரிய ஓமாரே கஸ்ஸப அனுநாயக்க தேரரைச் சந்தித்து உரையாடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த மதம் போன்றே ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் உரிய இடத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டு வாரங்கள் எனக் கூறி குழுக்களை நியமிப்பதை விட, 24 மணி நேரத்திற்குள் தகவல்களைத் திரட்டி, மதத் தலைவர்களின் ஆடைகள் மற்றும் ஏனைய விடயங்களுக்குத் தாக்கம் ஏற்படாதவாறு, காவி உடையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து யோசனையொன்றை முன்வைத்துள்ளோம். காலந்தாழ்த்தி இரண்டு வாரக் குழுக்களை நியமிக்காமல் துரிதத் தீர்வொன்றை காண வேண்டும். சீவரத்தைக் கழற்றும் செயற்பாடு மிகவும் அநாகரிகமான செயலாகும். சாதாரண மக்களுக்கு இதற்கு எத்தகைய உரிமையும் இல்லை. இப்போதாவது இந்த ஒழுங்கு விதிகளை மாற்றியமைப்பதற்குத் தன்னால் இயன்ற அதிகபட்ச அழுத்தத்தை எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »