Our Feeds


Tuesday, October 13, 2026

Zameera

ஞானசார தேரர் எனது நண்பர் தான்..

 

அமைச்சர் கே.டி. லால் காந்தா, கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தனிப்பட்ட நண்பர் என்றும், ஆனால் அந்த நட்பு அவரை சட்டத்திற்கு  அப்பால் கொண்டு சென்றுவிடாது என்றும் கூறியுள்ளார்.



ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த லால் காந்த, அரசாங்கம் பௌத்த துறவிகளை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது அல்லது பௌத்த மதத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.



“ஞானசார தேரர் எனது நண்பர்தான். ஆனால் இந்த நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டங்களை நாங்கள் உருவாக்கவில்லை, அதேபோல அவர் இந்த நிலைக்கு ஆளானதற்கும் நாங்கள் காரணமல்ல” என்று அமைச்சர் கூறினார்.


ஞானசார தேரர் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சர்ச்சை துறவிக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் சட்ட நடவடிக்கை அல்ல என்றும் வலியுறுத்தினார்.



அரசியல் நோக்கங்களுக்காகச் சிலர் ஞானசார தேரரின் நிலைமையைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய லால் காந்தா, அரசியல் நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுப்பதற்காக அந்தத் துறவி தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



தற்போது சிறையில் இருக்கும் ஏனைய பௌத்த துறவிகள் குறித்து ஏன் இதேபோன்ற கவலைகள் எழுப்பப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதுகுறித்து மூத்த பௌத்த மதத் தலைவர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதுடன், சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார். 


பௌத்த துறவிகளின் காவி ஆடையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதை தாம் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாக லால் காந்தா தெரிவித்தார்.

சட்டத்தை மீறும் நபர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும், ஆனால் காவி ஆடைக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுவதாக இருந்தால், தனிப்பட்ட வழக்குகளுக்கு ஏற்ப வேறுபட்ட விதிகளைப் பயன்படுத்தாமல், முறையான கலந்தாலோசனைகள் மூலமே அவை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.


Follow Us

Facebook

Whatsapp

 

Facebook X LinkedIn Messenger

Recent Articles


திரு. லக்ஸ்மன் கிரியெல்லவின்  கருத்துகள் குறித்து நான் ஆழ்ந்த அதிருப்தியும், வருத்தமும், கொண்டுள்ளேன் என்பதை  வலியுறுத்த விரும்புகின்றேன் ; மனோ

4 hours ago


VIDEO > ஞானசார தேரர் தன் சிறைவாசம் குறித்து மிகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததுடன் அவரிடம் இருந்த வி**ஷத்தையும் குடிக்க பார்த்தார் –  நான் தான் சமாதானப்படுத்தினேன் ; விடுதலைக்காக கையெழுத்து சேகரிக்கும் தித்தகல்ல ஆனந்தசிரி தேரர்

5 hours ago


நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது



Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »