Our Feeds


Monday, October 12, 2026

Zameera

ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்யும் ட்ரம்பின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

 

ஈரான் போரினால் சர்வதேச ரீதியில் எரிசக்தி விலைகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்வதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


அமெரிக்க மற்றும் சர்வதேச சந்தைகளுக்காக ஆரம்ப கட்டமாக 300,000 தொன்கள் டீசலை விடுவிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நவம்பரில் 500,000 தொன்களும், பின்னர் 1 மில்லியன் தொன்களும் ரஷ்யாவிடமிருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.


ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு எதிராகச் சில வாரங்களுக்கு முன்பே புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்கும் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார். 


இந்நிலையில், இந்தத்திட்டம் அமெரிக்கச் சட்டங்களை மீறுவதாக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


சுசான் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி உட்பட 7 மூத்த செனட்டர்கள் ட்ரம்பிற்கு எழுதிய கடிதத்தில், "உக்ரேன் பொதுமக்கள் மீது ரஷ்யா தொடர்ந்தும் கொடூரத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், புட்டினுக்கு நிதி வழங்கி உயிர்க்காப்பு அளிக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது" எனக் கூறி இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.


அமெரிக்காவில் டீசல் விலை கேலன் ஒன்றுக்கு 6.28 டொலராக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகள் மற்றும் லொறி சாரதிகளுக்கான  டீசல் விலையைக் குறைப்பதே தமது முதன்மை முன்னுரிமை என ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.


இந்த ஒப்பந்தம் புட்டினுக்கு அமெரிக்கா வழங்கும் "பரிசு" எனவும், இது போருக்கான முதலீடே ஆகும் எனவும் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »