தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரர்கள் மற்றும் ஏனைய மதகுருமார்கள் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக, துறைசார் மேற்பார்வைக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, சபாநாயகர் ஊடாக குறித்த குழுவின் தலைவருக்குக் கடிதமொன்றை அவர் அனுப்பியுள்ளார்.
ஆடை விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலையியற் கட்டளைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுக் கூட்டத்துக்கு அழைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இத்தகவலைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு இன்று (12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
