Our Feeds


Saturday, October 24, 2026

Zameera

குடு அஞ்சுவின் போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது!

 

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குடு அஞ்சு என்பவனின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாத்தறை, அக்குரஸ்ஸப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.


 


அவரது வசம் இருந்து 500 கிராம்களுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


 


போதைப்பொருட்களைப் போக்குவரத்து செய்வதற்கு ஒரு தடவைக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரையிலான தொகையை 'குடு அஞ்சு' இவருக்கு வழங்குவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »