Our Feeds


Thursday, October 8, 2026

SHAHNI RAMEES

தலங்கம இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது!

 


தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும்

அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை தயாரிக்க உதவி ஒத்தாசை புரிந்த நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


2026 பெப்ரவரி 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு முன்பாக இந்த இரட்டை மனிதப் படுகொலை நடத்தப்பட்டிருந்ததுடன், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 


அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2026 ஒக்டோபர் 07 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கைவிரல் அடையாளங்களை வைத்துள்ள இவர், போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீனுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவராவார். 


இந்த இரட்டைப் படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய வலையமைப்பிற்கு எதிராக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »