Our Feeds


Friday, October 30, 2026

Zameera

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு

 


பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று (30) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.




இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணையை நவம்பர் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு ஐந்து காணிகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தை மீறியதாக யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »