Our Feeds


Saturday, October 3, 2026

Zameera

மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு விளக்கமறியல்

 

மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06)   வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே அவர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.


இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும் கருத்துக்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக தலைமை நீதவான்  இந்த உத்தரவை பிறப்பித்தார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் சிறைத்தண்டனையைக் குறைப்பதற்காக, அவரது மனைவி இலஞ்சம் வழங்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இலஞ்சக் குற்றச்சாட்டுக்குத் தூண்டுதலாகவும் உடந்தையாகவும் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »