Our Feeds


Friday, October 2, 2026

SHAHNI RAMEES

உயர்தரப்பரீட்சைக்கான நடைமுறை தேர்வு ( Practical EXam) நேர அட்டவணை தொடர்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு அசௌகரியம்!

 


2026 உயர் தரப்பரிட்சை நடைமுறை தேர்வு ( Practical Exam)

நேர அட்டவணை தொடர்பில் முஸ்லிம் மாணவர்கள் அசெகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ள பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான நடைமுறை தேர்வு 12.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில் குறித்த தினத்தில் முஸ்லிம் மாணவர்கள் தங்களது ஜும்மா தொழுகையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த வருடமும் இதே போன்று நேர அட்டவணை தயாரிக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கல்வி அமைச்ச்சிடம் முறையிட்டிருந்த நிலையில் இந்த வருடமும் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு பரீட்சைக்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடபட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »