நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, நடப்பு மாதத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பின்வரும் விலைகளிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும்:
12.5 கிலோகிராம்– ரூ. 4,365
5 கிலோகிராம் – ரூ. 1,750
2.3 கிலோகிராம் – ரூ. 815
சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு மத்தியிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டு தற்போதைய விலையிலேயே எரிவாயுவை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
