Our Feeds


Monday, November 2, 2026

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவிற்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணைக்காக ஒத்திவைப்பு!



 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை

விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு வழக்கை மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசந்த கொடவெல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


அங்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரியின் வழிநடத்தலில் வழக்கின் விசாரணை அதிகாரி ஒருவரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.


அதனைத் தொடர்ந்து பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோவின் வழிநடத்தலில் குறுக்கு விசாரணை இடம்பெற்றது.


அதன் பின்னர் மேலதிக சாட்சி விசாரணை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


2013 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதிக்கும் ஜூன் மாதம் 6 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிவில் விமான சேவைகள் அமைச்சராகப் பணியாற்றியபோது, சட்டவிரோதமான முறையில் மூவாயிரம் வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் அரசுக்கு 128,520 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி 'ஊழல்' குற்றத்தைச் செய்தார் எனச் சுமத்தப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »