புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவில் பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் கொலையாளியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய திலானி ஷாலிகா தயானந்த என்ற பெண்ணே இவ்வாறு கத்தியால் வெட்டப்பட்டு வீட்டினுள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 119 பொலிஸ்அவசர அழைப்புப் பிரிவு ஊடாக புஸ்ஸல்லாவ பொலிசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும்இ குருநாகல் பகுதியைச் சேர்ந்த சமன் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எதிர்பார்ப்புடன் இருவரும் அவளது வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த சமன் என்பவர் அந்த வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளhர்.
இந்த இரு மரணங்களுக்குமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் புஸ்ஸல்லாவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
