Our Feeds


Sunday, November 1, 2026

Zameera

பொலிஸ் காவல் மரணங்களைத் தடுக்க கைது மற்றும் தடுப்புக்காவல் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்– சாலிய பீரிஸ்

 

(நா.தனுஜா)


பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு உள்ளிட்ட மீறல்கள் நிகழ்வதைத் தடுப்பதற்காகவே கைதுசெய்தல் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுக்கான அதிகாரங்கள் போதிய மீளாய்வுக்கும் மட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படவேண்டும். மட்டுமீறிய அதிகாரங்கள் சித்திரவதை கலாசாரம் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு என்பன தொடர்வதற்கே வழிகோலும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஹோமாகம பொலிஸ்காவலின்கீழ் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.  


இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஹோமாகமவில் பொலிஸ்காவலின் கீழ் இடம்பெற்ற உயிரிழப்பானது, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புகளுக்கு மட்டுமீறிய அதிகாரத்தை வழங்குவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை மீண்டுமொரு  முறை நினைவூட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



அத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்காகத் தான் கைதுசெய்தல் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுக்கான அதிகாரங்கள் போதிய மீளாய்வுக்கும் மட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் மட்டுமீறிய அதிகாரங்களும் மிகக்குறைவான மட்டுப்பாடுகளும் சித்திரவதை கலாசாரம் தொடர்வதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மேலோங்குவதற்குமே வழிகோலும் என்றும் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »