பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ, அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து, டெய்சி ஃபாரஸ்டை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதி வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
