Our Feeds


Tuesday, November 3, 2026

Zameera

களுத்துறை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!

 

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு உயிரிழந்தவர் மொனராகலை, வெலியாய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தை அடுத்து கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி குறித்த நபர் களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.


இந்நிலையில், களுத்துறை சிறைச்சாலையின் கழிப்பறைக்குள் குறித்த கைதி உயிரை மாய்க்க முயற்சித்தபோது, ஏனைய கைதிகள் சிலரால் அவதானிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் உடனடியாக நாகொட களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »