Our Feeds


Monday, November 2, 2026

ShortNews

எரிபொருள் விலை அதிகரித்தமைக்கான காரணங்கள் - கம்மன்பிலவின் விளக்கம்!


எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான பல காரணங்களை குறிப்பிடலாம் என முன்னாள் அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (02.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்....

நான்கு ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திய சூரிய மின் சக்தி திட்டத்தை முற்றிலுமாக சீர்குலைத்தது. இரண்டாவதாக தரமற்ற நிலக்கரியால் டீசல் மூலம் மின் உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரித்த செலவாகும்.

மேலும் சூரிய சக்தி மின்சாரத்திற்கு நியாயமான விலை வரிச் சலுகைகளை வழங்கி அதனை ஊக்குவிப்பதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் சூரிய மின் திட்டங்களை நிறுத்துவதையே ஊக்குவித்தது.

தரமற்ற நிலக்கரியால் பற்றாக்குறையாகும் மின்சாரத்தை டீசல் மூலம் உற்பத்தி செய்தே நிரப்ப வேண்டியேற்பட்டது. அப்படியிருக்கையில் இதற்கு உலகச் சந்தையைக் காரணம் காட்டி எங்களை ஏமாற்ற முனைந்தாலும் இது அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அறியாமையினால் ஏற்பட்டதாகும்.

உண்மையைக் கூறினால் ஊழலே பிரதான காரணமாகும். டீசல் மாபியாவிற்கு அடிமையானமை மற்றும் நிலக்கரி மோசடியினாலேயே இந்த அதிகப்படியான டீசல் செலவைச் சுமக்க வேண்டியேற்பட்டு நாட்டின் டொலர்கள் வெளியேறி எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

அதனால் எவ்விதத்திலும் விலை உயர்வு நியாயமானதல்ல. எவ்வாறாயினும் இன்று இந்த எரிபொருள் மீது அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான வரியை விதித்துள்ளது.

வரிகளை நீக்கி வாங்கிய விலையிலேயே வழங்குவதற்கே அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் இருந்த விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »