Our Feeds


Monday, November 2, 2026

Zameera

கல்கிஸை உணவக உரிமையாளர் கொலைச் சம்பவம் : சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்


 ( செ.சுபதர்ஷனி)



கல்கிஸை சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்ய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் கடந்த மாதம் 20 ஆம் திகதியன்று இரவு கார் ஒன்றில் வருகை தந்திருந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள், உணவக உரிமையாளரை இலக்குவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.  இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்ததோடு, சம்பவம் இடம்பெற்ற போது உணவகத்திலிருந்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


மேற்படி சம்பவம் தொடர்பில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், சிசிடிவி காணொளிகளை ஆய்வு செய்ததில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நகரைக் கைது செய்வதற்கு, படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்திருப்பின் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதன்படி கல்கிஸை வலயப் பொறுப்பதிகாரி - 071-8591661, கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பணியக நிலையப் பொறுப்பதிகாரி - 071-8596408 ஆகியோரின் இலக்கங்களைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »