Our Feeds


Thursday, November 12, 2026

ShortNews

மெட்ரோ பஸ் திட்டத்தில் தனியாருக்கும் வாய்ப்பு!


இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, கொழும்பை மையமாகக் கொண்ட மெட்ரோ பேருந்து சேவையை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 


பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 


மெட்ரோ பேருந்து சேவைக்கு இது வரையிலும் அரசாங்கம் முதலீடு செய்துள்ளது.


 


ஏற்கனவே 120 இந்தக் மேம்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன.


 


2027 ஆம் ஆண்டில் மேலும் 50 பேருந்துகள் இந்தப் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


 


இதற்கு மேலதிகமாக, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.


 


இதற்காக, சீன அரசாங்கத்திடமிருந்து 100 பேருந்துகள் நன்கொடையாகக் கிடைக்கப்பட்டுள்ளன.


 


இந்தப் பேருந்துகளுக்கான டிப்போக்களை நிர்மாணிக்கவும், மின்னேற்றும் வசதியை வழங்க பயிற்சிகளை வழங்கவும் அடுத்த ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.


 


இதற்காக ரூ. 4,500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  


 


மெட்ரோ பேருந்துகளை தனியார் துறையையும்  ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதற்கு, தற்போது வீதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளவர்களுக்கு தற்போதுள்ள பேருந்துகளுக்கு பதிலாக தாழ்தளப் பேருந்துகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 


நெடுந்தூரப் பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்காக, 600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  


 


மலைநாட்டு குறுகிய வீதிகளை கொண்ட கிராமிய பகுதிகளுக்கு 22 இருக்கைகளை கொண்ட 50 சிறிய பேருந்துகளை கொள்வனவு செய்ய 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »