Our Feeds


Thursday, November 12, 2026

ShortNews

பொலிஸாருக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படும்!


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய 15 மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 


பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 


2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எமது நாட்டின் காலநிலை நிலவரங்களுக்கு ஏற்ற, நவீன தொழில்நுட்ப உபகரணங்களை உள்ளடக்கிய புதிய சீருடையொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்படுகின்றது.  


 


நச்சுப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, புனர்வாழ்வளித்து மீண்டும் அவர்களை சமூகமயப்படுத்துவது “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் நீண்ட கால மற்றும் முக்கியமான நோக்கமாகும்.


 


இதற்காக சேனபுர மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகள் மற்றும் தொழிற்பயிற்சி வசதிகளை  பூரணமாக அபிவிருத்தி செய்தல் என்பவற்றிற்காக ரூ. 180 மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »