நாட்டின் பல்வேறு மாகாணங்களில் நாளை (03) சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்பதால், உள்ளூர் அளவில் வெள்ளப்பெருக்கு மற்றும் வானிலை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதேவேளை,தென் மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், பாதிப்புகளைக் குறைக்க பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Monday, November 2, 2026
பலத்த மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
