2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன.
நிறைவேற்றுச் சேவைகளில் தெரிவுசெய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
