Our Feeds


Thursday, November 5, 2026

ShortNews

சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேக நபரை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்!


பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப்  உள்ளிட்ட சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்திப் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இழைத்தமை தொடர்பாக பதிவாகியுள்ள பல முறைப்பாடுகள் குறித்து தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த சந்தேக நபர் அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ளதுடன், அவரது தற்போதைய இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

தேடப்பட்டு வரும் சந்தேகநபர் குறித்த விவரங்கள் வருமாறு:

பெயர்: அகமது லெப்பை முகம்மது அஸ்லம்
வயது: 47
தேசிய அடையாள அட்டை எண்: 197933200159
முகவரி: இல. 478/A1, அலீம் வீதி, சாய்ந்தமருது 16

சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக அவரது புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்கோ அல்லது அவரைக் கைது செய்வதற்கோ உதவும் வகையில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

பொறுப்பதிகாரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையம் : 071-8591162
சம்மாந்துறை பொலிஸ் நிலையம் : 067-2260222

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »