Our Feeds


Tuesday, November 3, 2026

ShortNews

நம்பிக்கையில்லா பிரேரணை - நிலையியற் கட்டளைகளுக்கமைய சமர்ப்பிக்கப்படவில்லை!


சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியற் கட்டளைகளுக்கு அமைய சமர்ப்பிக்கத் தெரியாத ஒரு எதிர்க்கட்சியே இருக்கிறது என பாராளுமன்றத்தில் இன்று (03) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

நிலையியற் கட்டளைகளுக்கமைய நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எவ்வாறு கொண்டு வருவது என்பது இன்னமும் புரியவில்லை.

நீங்கள் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள், அதற்கமைய இது வந்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும்.

குறைந்தபட்சம் யார் இதனை தயாரித்தது? எமக்கு மிகவும் தெளிவாகப் புரிகிறது இன்று ஏன் இந்த அமளிதுமளி என்று.

'திருடன், திருடன்' என்றெழுதிய பதாகைகளை வைத்திருக்கும் நபர்களால் பெரும்பான்மையானோருக்கு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலஞ்சம் - ஒழிப்பு ஆணைக்குழுவில் இப்போது வழக்குகள் விசாரணை செய்ய ஆரம்பிக்கப்படவுள்ளன. நீதிமன்ற வழக்குகள் சென்று கொண்டிருக்கின்றன.

இதில் எத்தனை பேர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன? இதில் எத்தனை பேருக்கு வழக்குகள் விசாரணை செய்யப்படுகின்றன?

எத்தனை பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள்? எத்தனை பேர் நீதிமன்றத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்? அதுதான் இந்த பதற்றத்திற்கு காரணம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »