எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் அண்மையில் பொலன்னறுவை மாவட்டம், சுங்காவில் ஜாமிஉல் பலாஹ் ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அப்பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீன்ஸ் நெல்சன் அவர்களின் அழைப்பின் பேரிலயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




