Our Feeds


Thursday, November 19, 2026

Zameera

உள்நாட்டு இறைவரித் திணைக்களத் தலைமையகத்தில் தீ விபத்து!

 

கொழும்பில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.




தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.




தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




எவ்வாறாயினும் கொழும்பில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தற்போது தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »