Our Feeds


Wednesday, November 18, 2026

ShortNews

NISD நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைக்க பிரதமர் உறுதி!


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை (NISD) அரச பல்கலைக்கழகமொன்றுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ், சுமார் 15 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் சமூகப்பணிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நிறுவனத்தின் கல்வித் தகைமைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பதுடன், ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், குறித்த கோரிக்கையை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு சென்று, நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார்.

அத்துடன், இவ்விடயத்தில் ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்ட முயற்சியையும் பாராட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »