Our Feeds


Showing posts with label #Braking news #Braking news.. Show all posts
Showing posts with label #Braking news #Braking news.. Show all posts

Wednesday, November 29, 2023

News Editor

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து


 கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் 147 கோடி) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது. அம்புலுவாவ உயிர் பல்வகைமை மையத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.

சீனா மெஷின்-பில்டிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இலங்கையின் முதல் கேபிள் கார் நிர்மாணிக்கப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Tuesday, August 29, 2023

SHAHNI RAMEES

“சுப்ரீம்சாட் ரோஹித்தவுக்கு சொந்தமானதல்ல, அவர் அங்கு ஒரு ஊழியர் மட்டுமே”

 

சுப்ரீம்சாட் தனியார் நிறுவனம் (SupremeSAT (Pvt) Ltd) ரோஹித

Tuesday, August 1, 2023

SHAHNI RAMEES

சிறுவன் ஹம்தி மரணம் – இதுவரை வெளியான அனைத்து தகவல்களும், ஆதாரங்களும் ஒரே பார்வையில்...

 

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக

Monday, June 26, 2023

ShortNews

மின் கட்டணம் குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு!



ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.


மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.


இந்த கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இம்முறை 3 சதவீதம் மட்டுமே மின்சார கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், அதுவும் 0-90 அலகுகள் வரையில் மின்சார பாவணையாளர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, June 25, 2023

ShortNews

ட்ரைவிங் லைசன் வழங்க ஏன் தாமதம்? - காரணம் வெளியானது!



சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இல்லாததே என அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் 5 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான பத்திரங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது மோட்டார் வாகன போக்குவரத்து துறையிடம் 5 இயந்திரங்கள் இருப்பதாகவும் ஆனால் தேவையை பூர்த்தி செய்ய அவை போதுமானதாக இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அட்டைகள் இல்லாததாலும், போதிய அச்சு இயந்திரங்கள் இல்லாததாலும் வழங்க வேண்டிய 800,000 அட்டைகள் இன்னும் நிலுவையில் உள்ளது எனவும், தற்போது, நாளொன்றுக்கு, 4,000 அட்டைகள்  அச்சிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Saturday, June 24, 2023

ShortNews

அச்சாறை உட்கொண்ட 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதி.



அச்சாறை உண்ட 60க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஹங்குரன்கெத்த, பொரமடுல்ல பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றே ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடலில் அரிப்புக்கள் மற்றும் தடிப்புகளுடன் அந்த மாணவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் உணவுக் கண்காட்சி இடம்பெற்றதாகவும், உணவுக் கண்காட்சியின் போது அச்சாறை உட்கொண்ட மாணவர்களுக்கே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.