Our Feeds


Showing posts with label #Braking news #Braking news. #Braking news.#Braking news.#Trending. Show all posts
Showing posts with label #Braking news #Braking news. #Braking news.#Braking news.#Trending. Show all posts

Sunday, June 25, 2023

ShortNews

பாடசாலை மாணவிகளை கண்காணிக்க வட்ஸ்அப் குழுக்கள் - யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடி!



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் தொலைப்பேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும் மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


மாணவிகளின் வரவு உட்பட அவர்கள் தொடர்பான ஆசிரியர்களின் அவதானிப்புகளை மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் பார்க்கும் வகையில் வட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்தக் குழுக்கள் வகுப்பு ஆசிரியைகளாலேயே கையாளப்பட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.


மாணவிகள் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் உடனடியாக இந்தக் குழுக்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விவரங்கள், சாரதிகளின் கைபேசி இலக்கங்கள் போன்றவையும் இந்தக் குழுக்களில் பகிரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நடைமுறையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் குறித்த செயற்றிட்டம் அந்தந்த பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்படும் எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் பெண்கள் பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Saturday, June 24, 2023

ShortNews

காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு சென்ற கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு.



நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு  காத்தான்குடிக்கு நேற்று 23ம் திகதி விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களும்  கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின்  தவிசாளர் P. மதன்வாசன் அவர்களும் காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு புனிதமிக்க குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அக்ஸா பள்ளி நிர்வாகத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது. 


அனைத்து நிருவாக  உறுப்பினர்கள் மற்றும்   பள்ளிவாயல் சுற்றுப் பயணக்குழு உறுப்பினர்களின்  முழுமையான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் விஷேட உரை நடாத்தினார்கள்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்,  நகர சபை செயலாளர் மற்றும் காத்தான்குடி போலீஸ் பொறுப்பதிகாரி மற்றும் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஊர் பிரமுகர்கள் ஜமாஅத்தார்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.


இறுதியில் எமது புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி மற்றும் மத்திய வீதி  புனர்நிர்மாணம் தொடர்பாக பேசப்பட்டு அதற்கான உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி தந்து விட்டுச் சென்றார்

ShortNews

BREAKING: ரஷ்யாவில் உள்நாட்டுக் கிளர்ச்சி, ஆட்சி கவிழ்ப்பு சதியா ? உருவானது பதற்றம் - புடின் நாட்டு மக்களுக்கு விசேட உரை.



வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


வாக்னர் ஆயுதக் குழுவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி புட்டின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், "நாம் இப்போது ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த ஆயுதக் குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கப் போகிறது.


மொஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், இராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.


வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனி நபர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தேச துரோகமாகும். நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம்.


இந்த ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய இராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


ஏற்கெனவே ரோஸ்டோவ் நகரில் 3 ரஷ்ய ஹெலிகாப்டர்களை வீழ்த்திவிட்டதாகக் கூறும் தி வாக்னர் ஆயுதக் குழுவினர் தற்போது வோரோனேஸ் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


அத்தனையும் பொய்? 


இதற்கிடையில் வாக்னர் ஆயுதக் குழுவின் அத்தனை தகவல்களும் பொய் என்று ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ப்ரிகோஸின் மீது கிரிமினல் குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக ஆயுதப் புரட்சியைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


இந்நிலையில் அவரின் தூண்டுதலில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.  வாக்னர் குழுவில் உள்ள அனைத்து வீரர்களுமே ரஷ்ய இராணுவத்துக்கு திரும்பலாம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம். அச்சமின்றி வாருங்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.


இது ஒருபுறம் இருக்க ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான சென் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள த வாக்னர் குழுவின் அதிகாரபூர்வ அலுவலக நிலையம் முடக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நாட்டு மக்களுக்காக உரையாற்றி இருக்கிறார். அவரது உரை சர்வதேச கவனம் பெற்றுள்ளது.


வாக்னர் ஆயுதக் குழு: ஐந்து தகவல்கள் 


1. திவாக்னர் குழு என்பது தனியார் ராணுவ அமைப்பு. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர்.


2. டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் ஜெய்வ்ஜின் ப்ரிகோஸின் என்ற புட்டினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014ல் இந்தப் படையை உருவாக்கினர். இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 முதல் உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக க்ரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் த வாக்னர் ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.


3. முன்னர் இது ஒரு ரகசிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. 5000 வீரர்கள் மட்டுமே இருந்தனர். 2015ல் இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.


4. தி வாக்னர் குழு கிழக்கு உக்ரைனின் பக்முத் நகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகளுக்கு பெரும் பங்களிப்பை அளித்தது.


5. இப்போது வாக்னர் ஆயுதக் குழுவில் 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். உக்ரைன் போரில் இவர்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். 2022 முதல் இவர்கள் தான் இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பில் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஏனெனில் ரஷ்ய இராணுவத்தில் நேரடியாக ஆள் சேர்ப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.


 

உற்று நோக்கும் அமெரிக்கா: 



இந்நிலையில் ரஷ்ய நிலவரம் குறித்து உற்று நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டின் என்பிசி சேனலுக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான எடம் ஹாட்ஜ், "நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். எங்களின் நட்பு நாடுகளுடனும் இந்த நிலைமை பற்றி ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


 

எச்சரிக்கை ஏன்? 



வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் சனிக்கிழமை வெளியிட்ட ஓடியோவில் ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், 



"நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். நாட்டின் இராணுவத் தலைமையை வீழ்த்துவோம். நாங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். வழியில் எந்தத் தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கெனவே ரஷ்ய இராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.



வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஆனால் அண்மைக்காலமாக இந்தக் குழுவுக்கு ரஷ்ய இராணுவம் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்துவருவதால் இந்த எதிர்வினை என்று தெரிகிறது. தனது ஓடியோ செய்தியில் வாக்னர் குழுத் தலைவர் ப்ரிகோஸின் இதனையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளார்.


ShortNews

BREAKING: ஜனாதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு: எனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு எனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது!



ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது வீடும் நூலகமும் எரிக்கப்பட்ட மறுதினம் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


காலி முகத்திடல் அரகலயவிற்கு பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தொடர்பான எதிர்பாராத நிகழ்வுகளில் ஒரு பகுதியாக தனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் தன்னை  பிரதமர் பதவியிலிருந்து  விலகுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றினால் தூண்டப்பட்டவர்களே தனது வீட்டிற்கு தீமூட்டினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்தை 'அரகலய' ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆட்சிமாற்றம் குறித்து மிகவும் தீவிரமாக காணப்பட்ட ஒரு தருணத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்தது யார்? என்ற சர்ச்சை மூண்டுள்ளது.

அரசமைப்பிற்கு ஏற்ப சபாநாயகர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

லண்டனில் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 40 வருட பூர்த்தியை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் பல சர்வதேச தலையீடுகள் காணப்பட்டன என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நூலொன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டமெடுத்த தருணத்தில், அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை  நீக்குமாறு கேட்டுக்கொண்டனர் என விமல்வீரவன்ச தெரிவித்திருந்தார்.

அவ்வேளை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனெரத் இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்தார். ஆனால் கோட்டாபய தனது இராஜினாமா கடிதத்தில் மாத்திரம் கையெழுத்திட்டார்.

இதன் காரணமாக அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சபாநாயகரை அழைத்து அவர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் எனவும் விமல்வீரவன்ச தெரிவித்திருந்தார்.

எனினும் சபாநாயகர் அதனை ஏற்கமறுத்து பிரதமர் பொறுப்பை ஏற்பார் என குறிப்பிட்டிருந்தார் எனவும் விமல்வீரவன்ச தெரிவித்திருந்தார்.

புத்தகத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க தூதுவர் நிராகரித்திருந்தார்.

ஜனாதிபதி லண்டனில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம்  விமல்வீரவன்ச தனது நூலில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருமளவானவர்களை கொழும்பிற்கு கொண்டுவந்து ஜனாதிபதியின் இல்லத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்தனர். இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை கடற்படையின் கப்பலில் தப்பிச் சென்றார். அன்று மதியம் ஒன்று கூடிய அனைத்து கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். நான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் நான் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் நான் உறுதியாகயிருந்தேன் அதனை ஏற்க மறுத்தேன் அரசமைப்பின் படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர் ஒருவர் பதவியேற்க வேண்டும் அதன் பின்னர் நான் பதவி விலகுவேன் என தெரிவித்தேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் சில ஊடக நிறுவனங்களால் உந்தப்பட்டவர்கள் எனது வீட்டிற்கு தீமூட்டினார்கள் நான் அதனால் பதவி விலகுவேன் என கருதினார்கள் ஆனால் நான் உறுதியாகயிருந்தேன் அடிபணிய மறுத்தேன்.

மறுநாள் நான் பதவி விலக வேண்டும் என்ற வேண்டுகோள் வெளியானது  சிலர் சபாநாயகர்  பதவியேற்க வேண்டும் என தெரிவித்தனர் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாகயிருந்து பதவியிலிருந்து விலகமறுத்தேன். எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

daily mirror

நன்றி: வீரகேசரி

Friday, June 23, 2023

ShortNews

ஈரானுடன் மீண்டும் நடைமுறைக்கு வரும் பண்டமாற்று முறை!



இலங்கை, ஈரானுடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய்க்காக தேயிலையை வழங்கும் பண்டமாற்றுச் சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.


ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.

2012இல் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக 2021இல் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.

எனினும், கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு, பொருளாதாரத்தை மூழ்கடித்தமை காரணமாக இதன் நடைமுறை தாமதமானது.

இந்தநிலையில், தற்போது ஈரான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் டொலர்களை நம்பாமல் வர்த்தகம் செய்யலாம் என்று இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை 48 மாதங்களுக்கு அனுப்புவது என்பது உடன்படிக்கையாகும்.

எனினும், மாதத்திற்கு சுமார் 2 மில்லியன் டொலர்களில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக நிராஜ் டி மெல் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் பிரபலமான சிலோன் தேயிலை இலங்கையின் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பயிராகும்.

இது கடந்த ஆண்டு 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டு வந்தது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான், இலங்கையின் முக்கிய தேயிலை கொள்வனவாளர்களில் உள்ளடங்குகிறது.

எனினும், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் வர்த்தகத்தை பாதித்ததால் 2018 இல் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கடந்த ஆண்டு 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இந்த ஏற்றுமதி சீராக குறைந்தது.

இதற்கிடையில், அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பண்டமாற்றுத் திட்டத்தின் கீழ், எண்ணெயை கொள்வனவு செய்யும் அரச நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தேயிலை சபையின் ஊடாக ரூபாவை வழங்கவுள்ளது.
ShortNews

விகாரைக்கு சென்று வெளியே வந்த உக்ரேனிய இளம் பெண்ணுக்கு நடந்த அநியாயம் - 19 வயது இளைஞன் கைது.



ஹபராதுவை, பீல்லகொட பிரதேச விஹாரை ஒன்றில்  வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலா பயணியான  பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞரை  ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இந்த யுவதி  விஹாரைக்குச்  சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நேற்று முன்தினம் (21)  வழக்கம்போல் விஹாரைக்குச் சென்று போதி மரத்தை வழிபட்டுள்ளார்.

அப்போது, குறித்த   சந்தேக நபர் அங்கு வந்து புத்தர் சிலையை வழிபட  வருமாறு யுவதியை அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞரின் அழைப்பின் பிரகாரம், புத்தரின் சிலையை  வணங்கிவிட்டு வெளியே வந்தவுடன் யுவதியை    பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.