Our Feeds


Showing posts with label #Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news.#Trending`#Braking news#World news#New update. Show all posts
Showing posts with label #Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news #Braking news.#Braking news.#Trending`#Braking news#World news#New update. Show all posts

Sunday, January 1, 2023

SHAHNI RAMEES

ஆண்டின் முதல் நாளில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 


2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற

Sunday, November 20, 2022

SHAHNI RAMEES

இன்று மின்வெட்டு எந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் அமுலாகும்? - பட்டியில் இணைப்பு..!

 



நாடளாவிய ரீதியில் இன்று (20) 01 மணித்தியாலம்

RilmiFaleel

தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருது.

திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாச்சல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை வழங்கி கெளரவித்தார்

அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சா்வதேச தலைவா்களுக்கு தா்மசாலாவில் செயற்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட தலாய் லாமா, ‘வன்முறையின்மை, இரக்கம் ஆகியவைதான் உலக அமைதிக்குத் தேவையானது. இவை இந்திய கலாசாரத்தில் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துள்ளது. எந்தப் பிரச்னைக்கும் போரால் தீா்வு காண முடியாது. ஆனால் அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் தீா்வு காண முடியும்’ என்றார்.

விருதை வழங்கிய ஹிமாச்சல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் தெரிவிக்கையில், ‘இந்த விருதுக்கு உலகிலேயே மிகவும் பொருத்தமான நபா் தலாய் லாமாதான். அவா் சா்வதேச அமைதிக்கான தூதுவராவார்.

வன்முறையின்மை, இரக்கம் ஆகிய அவரது கொள்கைகள் இன்றைய உலகுக்கு மிகவும் தேவையானவை. இவை இராணுவத்தைவிட மிகவும் வலுவானவை. நல்லொழுக்கம், இரக்கம், பாசம் ஆகியவற்றை பல்லாண்டுகளாக தலாய் லாமா முன்னெடுத்துச் செல்கிறார். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவுக்கு பிறகு உலக குடிமகனாகும் திறமை தலாய் லாமாவுக்கு உண்டு. அவருக்கு எல்லையே இல்லை’ என்றார்.

RilmiFaleel

பசில் நாடு திரும்புகிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களை கழித்த பின்னர் இன்று (20) நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பசில் ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமை பெற்ற அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்.

பசில் ராஜபக்ஷவின் வருகையை தொடர்ந்து எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பது பசில் ராஜபக்ஷவின் கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
RilmiFaleel

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா – தலைநகருக்கு பூட்டு.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்றின் புதிய அலை எழுந்துள்ளதால், அங்குள்ள வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா, இலங்கை  உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவுகிறது.

இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெய்ஜிங்கில் மாத்திரம் 515 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பெய்ஜிங் நகரில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

RilmiFaleel

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.

எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.