Our Feeds


Showing posts with label #news#world#breaking. Show all posts
Showing posts with label #news#world#breaking. Show all posts

Monday, October 28, 2024

Zameera

சொகுசு வாகனமொன்று மீட்பு

மாத்தறை - பாபுரண பிரதேசத்தில் சொகுசு வண்டியொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் அரசு பகுப்பாய்வாளர் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Friday, October 4, 2024

Zameera

முன்னாள் அமைச்சர்களின் பங்களாக்களில் குவிந்து கிடக்கும் தளபாடங்கள் - அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்


 பல முன்னாள் அமைச்சர்களுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை மீண்டும் வழங்கும் வரை, இந்த பங்களாக்களை அரசால் ஏற்றுக்கொள்வது தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பொருட்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் பலர் பல அரசாங்க நிறுவனங்களை வைத்திருப்பதால், அந்த ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் நாற்காலிகள், மேஜைகள், தொலைக்காட்சிகள் போன்ற தளபாடங்களை அவர்கள் அரச  பங்களாக்களுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் இதுவரை பத்து பங்களாக்கள் மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. 

Friday, September 27, 2024

Zameera

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு


 நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (26) வெளியிட்டார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Friday, September 20, 2024

Zameera

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செப்டெம்பர் 24ஆம் திகதி திறக்கப்படும்


 தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி விடுதியில் உள்ள மாணவர்கள் செப்டெம்பர் மாதம் 23ம் திகதி முதல் தங்களுடைய விடுதிகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடுவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 26, 2024

Zameera

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்த தடை


 ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு செலவில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.


அரசாங்க விமானங்கள் தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மேலும், தேர்தல் அல்லாத பிற கடமைகளுக்கு விமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அரசாங்க விமானங்களை அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, August 23, 2024

Zameera

மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள்


 இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.

தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி முழு நாட்டினதும் வெற்றியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி நேற்று (21) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பாளராக விக்டர் ஸ்டான்லி நியமிக்கப்பட்டார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த விக்டர் ஸ்டான்லி கூறியதாவது:

‘’வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

கடந்த காலத்தில் எமது நாட்டில் இருந்த பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே. நாட்டு மக்கள் வரிசைகள் இருந்தனர். இன்று நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த காலத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது. இன்று நாட்டின் தலைமையை கோரும் சஜித் பிரேமதாச நெருக்கடியான நேரத்தில் நாடு மற்றும் மக்களைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தமை நாட்டிற்கு சிறப்பாக அமைந்தது. புதிய நம்பிக்கையையும் அளித்தது. அன்று நமது நாட்டு மக்கள் வீதிகளில் இறந்து கிடக்கும் யுகம் உருவாகியிருந்தது. குழந்தைகளுக்கு பால்மா பாக்கெட் வாங்கக்கூட முடியாமல் மக்கள் தவித்தனர். இவர்கள் படும் துயரத்தைப் பார்த்து எதிர்க்கட்சி தலைவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் கஷ்டப்படும் போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.

இப்போது அவர்களில் ஒருவர் நாட்டைத் தனக்குத் தருமாறு கேட்கிறார். இன்னொருவர் அவர் வெற்றிபெறுவார் என்கிறார். அன்று இவர்கள் எங்கே இருந்தார்கள்? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்று அன்று நாடு இருந்த நிலையில் இருந்து இன்று இந்த நிலைமைக்கு மாற்றியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் பொறுப்பை ஏற்றதும், வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று அறிவித்தார். அதை இன்று அவர் செயலில் நிரூபித்துள்ளார்.

எனவே, நாம் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்தாலும் நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்தோம். வடக்கு கிழக்கு மக்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.

எனவே, இந்த நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று இந்நாட்டின் இளைஞர் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல் ஒரு லிட்டரை 117 ரூபாய்க்கு வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் அரசியல் அலையில் சிக்கி மாறியது. இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்குக் கொண்டு வந்து முழு நாடும் அழித்தது.

தற்போது “கோட்டா-2” உருவாகி வருகிறது. சிலர் வரிகளை முற்றிலுமாக இரத்து செய்வதாக கூறுகின்றனர். மற்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றப்படும் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் சாத்தியமற்றது என்றுதான் கூற வேண்டும். எனவே, மீண்டும் அதே குழிக்குள் விழ வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றிபெறாவிட்டால், இந்த நாடு மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்லும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, விசித்திரக் கதைகளிலோ அல்லது அலைகளிலோ ஏமாந்து இந்த நாட்டின் எதிர்காலத்தை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து, அவருடன் இணைந்து நாட்டை முன்னோக்

Wednesday, August 21, 2024

Zameera

பிரதான மையங்களாக கொழும்பு, காலி, கண்டி, திருகோணமலை


 கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

“எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய நகர்ப்புற பகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியை ஒரு பெரிய மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன. கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலையில் 4 கட்டப்பட்டுள்ளன. இந்த நான்கும் இலங்கையின் முக்கிய மையங்களாக உருவாக்கப்பட உள்ளன. மோடியுடன் கலந்துரையாடினேன். சென்னை IIT நிறுவனத்தின் ஒரு வளாகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கண்டியை பரிந்துரைத்தேன்.  இப்போது கலஹாவில் தொடங்க பரிந்துரைக்கிறேன். அடுத்த 10 வருடங்களில் கண்டியை இலங்கையின் முக்கிய நகரமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம்.''

வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாத்து ஹில்டன் நிறுவனத்துடன் இணைந்து போகம்பரை சிறைச்சாலையை ஹோட்டலாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

“பழைய தபால் நிலையத்துடன் தாஜ் ஓட்டலையும் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அத்துடன் போகம்பர பிரதேசத்தில் வேறு சில காணிகளை நாம் சுற்றுலா ஹோட்டல்களாக பயன்படுத்த முடியும் அதற்கு கண்டி தெற்கு டிப்போவை பயன்படுத்த முடியும். கண்டி சந்தையை மீள் அபிவிருத்தி செய்வதற்கும், மறைந்த கெர்ரிஹில் கட்டிடக் கலைஞரின் நிறுவனத்திடம் இருந்து போகம்பரா பகுதியையும் அரண்மனையையும் சேர்க்கும் திட்டமும் உள்ளது" என்றார்.

Sunday, August 18, 2024

Zameera

விவசாயிகளுக்கு 55,000 மெற்றிக் தொன் இலவச உரம்


 எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உரம் கிடைக்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கை காலங்களுக்குத் தேவையான அடிகட்டு உரம், இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Tuesday, August 13, 2024

Zameera

இலங்கையில் ஸ்டார்லிங்க்குக்கு அனுமதி


 இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு   ஆகஸ்ட் 12 முதல் அமுலாகும் வகையில்  தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்" அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

Sunday, August 11, 2024

Zameera

காசாவில் பாடசாலை மீது தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் பலி


 காசாவில் அகதிகள் புகலிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக பாலஸ்தீன செய்தி ஊடகக் குறிப்பு தெரிவிக்கின்றது.

கிழக்கு காசாவில் பாடசாலை ஒன்று அகதிகள் புகலிடமாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் மருத்துவப் பிரிவு அறிக்கையில், “அகதிகளாக தங்கியிருந்த மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலரும் உயிரிழந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் காசாவில் 4 பாடசாலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 4 ஆம் திகதி இஸ்ரேலிய தாக்குதலில் அகதிகள் புகலிடமாக செயல்பட்ட 2 பள்ளிகள் தகர்க்கப்பட்டன. இதில் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய தினம் காசா நகரின் ஹமாமா பள்ளியில் நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி தலால் அல் முக்ராபி பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று இஸ்ரேல் மீண்டும் அகதிகள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளியை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இஸ்ரேல் பள்ளிக்கூடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இத்தகைய அகதிகள் புகலிடங்களில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்துகொண்டு அந்த இடங்களை ஹமாஸ் கமாண்ட் மையங்களாகப் பயன்படுத்துவதாக வந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலையடுத்து இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர் இஸ்ரேல் முழுவீச்சில் காசா மீது தாக்குதலை தொடங்கியது.

இதுவரை 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். 10 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்தியா இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tuesday, August 6, 2024

Zameera

12ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை அறிவிக்கிறேன் - வடிவேல் சுரேஷ்


 ஜனாதிபதி தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணங்களையும் செலுத்தி வருகின்றனர்.

 

இருப்பினும் இது சம்பந்தமாகவும் தான் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் தனது தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க அங்கத்தவர்களிடம் கலந்து ஆலோசித்து எதிர்வரும் 12 ம் திகதி தான் யாருக்கு ஆதரவளிப்பது என அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Wednesday, July 24, 2024

Zameera

AI மூலம் ஊழியர்கள் கண்காணிக்கும் நிறுவனம்


 சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் AI உதவியை ஒரு நிறுவனம்.  ஜப்பான் நாட்டில் உள்ள நிறுவனமே இவ்வாறு செய்துள்ளது.

2022-ன் இறுதியில் ஜெனரேட்டிவ் AI  குறித்த பேச்சு உலகளவில் வைரல் ஆனது. அதுவரை டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் மக்களிடையே AI இருந்தாலும் அது அதிக அளவில் கவனம் பெறாமல் இருந்தது என்று சொல்லலாம். ஓபன் AI நிறுவனத்தின் ‘சாட்-ஜிபிடி’ வரவு அதனை அப்படியே மாற்றியது.

இந்த ஜெனரேட்டிவ் AI பாட் டிஜிட்டல் பயனர்களின் அதீத வரவேற்பை பெற்றது. டெக்ஸ்ட், படம் போன்றவற்றை பயனர்கள் எளிதில் இதில் பெறலாம். கட்டுரை, கணினி புரோகிராமிங் என அனைத்தையும் இந்த பாட் எழுதி தரும். பாட்டிகள் போல கதையும் சொல்லும். நாம் ப்ராம்ப்ட் செய்யும் படத்தை உருவாக்கி கொடுக்கும் வல்லமையும் இதற்கு உள்ளது.

ஓபன் AI நிறுவனத்தை தொடர்ந்து அப்படியே கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என அனைத்தும் இந்த ஜெனரேட்டிவ் AI பாட் கோதாவில் இறங்கின. அதன் விளைவாக இப்போது நமது செல்போனில், கணினியில், பயன்படுத்தும் செயலிகளில் என அனைத்து இடத்திலும் இடம் பிடித்துவிட்டது. அதற்கு சிறந்த உதாரணம் மெட்டா AI மற்றும் மைக்ரோசாப்ட் கோ-பைலட்.

‘நீ அறியாதது எதுவும் உண்டா?’, ‘எப்போது என்னுடன் தமிழில் பேசுவாய்?’ என பயனர்களை வேடிக்கையாக கேள்வி கேட்க செய்யும் அளவுக்கு இதன் அக்சஸ் உள்ளது. அந்த அளவுக்கு ஜெனரேட்டிவ் AI நம்முடன் இணைந்து விட்டது. இத்தகைய சூழலில் தான் ஜப்பான் நாட்டில் சூப்பர் மார்க்கெட் செயின் பிசினஸில் ஈடுபட்டு வரும் AEON என்ற நிறுவனம் AI தொழில்நுட்பத்தை தங்களது வணிகம் சார்ந்து பயன்படுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் தங்களது ஊழியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் கண்காணிக்கிறது.


Thursday, June 27, 2024

Zameera

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் - ஜனாதிபதி

 

நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். 

இன்று வியாழக்கிழமை (27) கண்டி - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்தார்.

Monday, June 24, 2024

Zameera

புதிய வீட்டுத்திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டம்


 மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பது உட்பட அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பல புதிய திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்,யுவதிகள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி:நிரந்தர வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஏராளமானோர் இப்பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கான வீட்டுவசதி மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உள்ளதா?

பதில்:இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு தேர்தல் காலமாகும். எனவே, இவ்வருடம் அந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியாத போதிலும், அடுத்த சில வருடங்களில் பல புதிய வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Thursday, June 13, 2024

Zameera

சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் - ரயில் நிலைய அதிபர் சங்கம்


 தொழில்சார் பிரச்சினைகளுக்காக ரயில்வே திணைக்களத்திடம் கோரிய முன்மொழிவுகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் உடனடியாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்திற்கு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Sunday, June 9, 2024

Zameera

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


 நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Wednesday, June 5, 2024

Zameera

மொட்டு மற்றும் சுதந்திர கட்சியின் மேலும் மூவர் சஜித்துடன் இணைவு


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடமேற்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவும் ஒருவர்.

பிங்கிரிய தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சமந்த பிரதீப் குமாரவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அவர்கள் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமித்தார்.

அதுமட்டுமல்லாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதியின் அழைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதியின் முன்னாள் பிரதம அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை பொத்துவில் தொகுதியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Thursday, May 30, 2024

Zameera

"Remal " சூறாவளி தாக்கம் இன்று முதல் குறைவடையும்




 'றீமால்' சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலை காரணமாக 10 ஆயிரத்து 483 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Friday, May 24, 2024

Zameera

டெங்கு நோய் பரவலை கட்டுபடுத்த உடனடி நடவடிக்கை - சாகல ரத்நாயக்கவினால் ஆலோசனை


 மழையுடனான காலநிலையினால்   நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், டெங்கு நோய் பரவலை கட்டுபடுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மே 26ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெங்கு ஒழிப்பு  வாரத்தின் போது கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது இடங்களின் சூழலைச் சுற்றி பரவும் டெங்கு அபாயத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே மாதத்தில் 1,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஒன்பது மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Saturday, May 18, 2024

Zameera

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம்


 ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார்.

அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி,

“வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இதுவரை பொதுமக்களின் நலன்களுக்காகப் பாரிய பணிகளைச் செய்துள்ளது. வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க பொறிமுறையை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அது தொடர்பாக, அரசதுறையின் செயல்பாடு குறித்து, துறைசார் மேற்பார்வைக் குழு ஆய்வு செய்து வருகிறது.

இதன்போது உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைக் கட்டமைப்பு, அமைச்சுகள் போன்ற அனைத்து அரச நிறுவனங்களின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகளை ஆய்வு செய்கிறோம். ஆனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின்படி, சில நிறுவனங்களின் செயல்திறன் 23 வீதமாகவே இருக்கிறது.

இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு பதில்கள் கிடைத்தன. எவ்வாறாயினும், இந்நிலைமையைத் தவிர்க்கும் வகையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் உட்பட மக்களுடன் நெருக்கமாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.

அதன்போது மக்களுக்கு எவ்வாறு திறமையான மற்றும் நட்புறவான சேவையை வழங்குவது என்பது குறித்து அவர்களுக்கு தெரிளிவூட்டப்பட்டது. மேலும், மக்களுக்கு தங்கு, தடையற்ற சேவையை வழங்க அரச ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது.

அடுத்த வருடமும் சம்பளம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் அரச ஊழியர்கள், மக்களுக்கான கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும். அரசியல் பொறிமுறையால் கொள்கையை உருவாக்க முடியும். அரச நிறுவனத்திற்கு கண்ணீருடன் வரும் மக்களை சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பும் வகையில் அரச சேவை செயல்பட வேண்டும்.

மேலும், அரசதுறையில் ஊழல் மோசடிகளைத் தடுக்கும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை நடத்த அவசியமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள முறைகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அரச பொறிமுறை திறம்பட செயல்படுவதற்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். மேலும், வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி மேலும் தெரிவித்தார்.