Our Feeds


Showing posts with label #update#news#new updates#world news. Show all posts
Showing posts with label #update#news#new updates#world news. Show all posts

Tuesday, March 4, 2025

Zameera

தேசபந்து தென்னகோன் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைவார்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை மறுநாள் (06) நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், நேற்று (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாலை வரை அப்படி எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

இருப்பினும், வெலிகம பொலிஸ் தலைமையகத்தில் நீதிமன்ற திகதி அடுத்த வியாழக்கிழமை என்பதால், அன்றைய தினம் அவர் ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

Wednesday, February 19, 2025

Zameera

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் NPP பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு


 தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் இணையவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Saturday, January 4, 2025

Zameera

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை


 ஊவா மாகாணத்தில் இன்று(04) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Monday, December 30, 2024

Zameera

போக்குவரத்து விதி மீறல்களில் 8,000க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
 
பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
அதன்படி, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8068 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 
 

Saturday, December 28, 2024

Zameera

மன்மோகன்சிங்கின் மறைவு: இந்தியர்களுக்கும் இலங்கையினருக்கும் பேரிழப்பு - ஜீவன்


 இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்சிங் 92 வயதில் காலமாகியுள்ளார். அவரின் இழப்பு இந்தியர்களுக்கும் , இலங்கையினருக்கும்  பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நுவரெலியா யாமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில்  தெரிவித்துள்ளார்.


தனது இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்...


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானிடமிருந்து மலையக மக்களின் பிரச்சினைகளை கரிசனையோடு கேட்டறிந்து  பல நல திட்டங்களை முன்னெடுத்தவர் அமரர் மன்மோகன்சிங். அவருடைய ஆட்சி காலப்பகுதில் இலங்கை மக்களுக்கும், மலையக மக்களுக்கும் பல நன்மைகள் கிட்டியமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இவரின் இழப்பு இலங்கை மக்களுக்கும் மலையக மக்களுக்கும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Wednesday, December 25, 2024

Zameera

துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை வினைத்திறனாக்க நடவடிக்கை


 இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை வினைத்திறனாக்கும் நோக்கத்திற்காக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.