Our Feeds


Showing posts with label brea. Show all posts
Showing posts with label brea. Show all posts

Sunday, August 2, 2026

SHAHNI RAMEES

மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!


 மஹர சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த

Tuesday, June 30, 2026

SHAHNI RAMEES

Mr. கொத்து விராஜ் விக்ரமநாயக்க கைது!

 


நாட்டில் பிரபலமான கொத்து உணவகமான

Tuesday, June 10, 2025

SHAHNI RAMEES

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்- இந்த அரசாங்கம் 'எல் போர்ட்' என்று ரணில் குறிப்பிட்ட கருத்து உண்மையாகியுள்ளது!

 


கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும்

Friday, December 27, 2024

SHAHNI RAMEES

பிரதிபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை ஏமாற்றிய நபர் ; 17 புதிய கடவுச்சீட்டுகளுடன் தலைமறைவு ; நடந்தது என்ன? #VIDEO

 


நபர் ஒருவர் தன்னையும் தனது அமைச்சின் அதிகாரிகளையும் பணியாளர்களையும் ஏமாற்றிவிட்டு 17 புதிய கடவுச்சீட்டுகளுடன் தப்பியோடியுள்ளார் என பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


 தனது அலுவலகத்திற்கு முதல்தடவை விஜயம் மேற்கொண்டவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.


பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது




நான் அமைச்சின் அலுவலகத்திற்குள் முதல்தடவை நுழைந்ததும்,நபர் ஒருவர் என்னை அமைச்சின் பல பிரிவுகளிற்கு அழைத்து சென்று காண்பித்தார் நான்  அவர் அமைச்சை சேர்ந்தவராகயிருப்பார் என நினைத்தேன் 


நான் அவர் அமைச்சின் பணியாளர் என நினைத்தேன் ஆனால் அவர் தன்னை ஜனாதிபதி செயலகம் பிரதியமைச்சரின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவதற்காக அனுப்பியதாக அமைச்சரவை பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


அன்றைய தினம் தேநீர் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது,அந்த நபர் அதனை  ஏற்பாடு செய்வதில் மும்முரமாக செயற்பட்டார்.என்னை  அவர் அமைச்சின் பல பகுதிகளிற்கும் அழைத்து சென்றார்.


கடவுச்சீட்டை தயாரிக்கும் பகுதிக்கு என்னை அழைத்துச்சென்ற நபர் இதுவரை எந்த அமைச்சரும் அங்கு வரவில்லை என குறிப்பிட்டார்.


மறுநாள் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது,  எனது அலுவலக பணியாளர்கள் என்னை பாராட்டி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கவேண்டும் என இந்த நபர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.


அவர் எனது அலுவலக பணியாளராக பணியாற்றுவதற்கு பொருத்தமற்றவர்  என எனக்கு தெரிவித்திருந்தனர்.


விசாரணைகளின் போது அந்த நபர் எனது அமைச்சுடன் தொடர்பில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது.


இதேவேளை குறிப்பிட்ட நபர் 17 கடவுச்சீட்டுகளுடன் அமைச்சின் அலுவலகத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது,அமைச்சர் கடவுச்சீட்டுகளை பெறச்சொன்னார் என தெரிவித்தே அவர் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளார்.


அந்த நபர் நிசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.