நாட்டில் பிரபலமான கொத்து உணவகமான Mr. கொத்து உணவக உரிமையாளர், தனது ஊழியர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (30) மஹரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
