Our Feeds


Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Saturday, May 10, 2025

Admin

“டீச்சர் அம்மா” - ஹயேஷிகா கைதாகும் வாய்ப்பு - நடந்தது என்ன? - VIDEO



ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


ஹயேஷிகா பெர்னாண்டோ அந்த இளைஞனை உதைத்துள்ள நிலையில், அந்த உதை இளைஞனின் விதை பகுதியினை பாதித்துள்ளதுடன், பின்னர் அவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 


சம்பவத்திற்குப் பிறகு, ஹயேஷிகா பெர்னாண்டோ அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரது கணவர் மற்றும் ஹயேஷிகா பெர்னாண்டோவின் முகாமையாளர் இருவரும் கட்டானா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 


அதன்படி, நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான 'டீச்சர் அம்மா' என்ற ஹயேஷிகா பெர்னாண்டோ தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கட்டான பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Wednesday, April 30, 2025

Admin

VIDEO: பயப்பட வேண்டாம் | அடுத்த 10 ஆண்டுகளுக்கு சகோதரர் அனுரதான் ஜனாதிபதி - அடித்துச் சொல்லும் பிரதமர் ஹரினி



சிறந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். மே மாதம் 6ம் திகதி அனைவரும் எமக்கு வாக்களியுங்கள். 2024 இல் நீங்கள் அனைவரும் இணைந்து ஆரம்பித்த அந்த மாற்றத்தின் மூன்றாவது அத்தியாயம் மே மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது என தெமடகொட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


அங்கு தொர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ரனிலை ஜனாதிபதியாக்குவதாக யாரோ சொல்வதை கேட்டேன். அப்படி எண்ணிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பல ஆண்டுகளாக ரனில் எந்தத் தேர்தல்களிலும் வெற்றிபெற வில்லை. அவசரமாக வந்து ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியாக வேண்டும் என கூறுகிறார். 


பயப்படத் தேவையில்லை. தற்போதைய ஜனாதிபதி சகோதரர் அனுரகுமார எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு இலங்கையை ஆட்சி செய்வார். அவர்கள் சொல்வதை சொல்லிக்கொண்டே இருக்கட்டும் அதுதான் அவர்களின் வேலை. 


நாட்டை மேம்படுத்தும் சரியான தலைவர்களை தேர்வு செய்வதே நமது வேலை. அதை நாம் செய்வோம். என பிரதமர் மேலும் தெரிவித்தார். 


Wednesday, April 2, 2025

Admin

VIDEO: வடமத்திய மாகாண (SLPP) முன்னாள் முதலமைச்சருக்கும், தனிப்பட்ட செயலாளருக்கும் 16 ஆண்டுகள் சிறை



வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 


அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 


வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.


Saturday, January 11, 2025

Admin

VIDEO & PHOTOS: இரத்தம் அதிகம் தேவையான இந்நேரத்தில் ACTJ வின் பணி மகத்தானது - கொழும்பு, இரத்ததான முகாமில் மருத்துவர் பாராட்டு.


'உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் - ACTJ நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு இன்று கொழும்பு, மாளிகாவத்தை மன்ஸில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 


சுமார் 89 நபர்கள் குறித்த நிகழ்வில் இரத்தக் கொடை வழங்குவதற்காக வருகை தந்த நிலையில் இரத்தம் வழங்கும் தகுதி பெற்ற 59 பேர் இரத்தக் கொடை வழங்கினார்கள். 


நாட்டில் இரத்தத்தின் தேவை அதிகமாகியிருக்கும் இந்த நிலையில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் இப்பணி சிறப்புக்கும் வரவேற்புக்கும் உரியது என நிகழ்வில் கலந்துகொண்ட மருத்துவர் குழாம் பாராட்டுத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.


   

















 

Saturday, September 28, 2024

Admin

VIDEO: ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கொல்லப்பட்டது உறுதி - ஹிஸ்புல்லாஹ் ராணுவம் உறுதிப்படுத்தியது.

 


பாலஸ்தீன அப்பாவிகளுக்கு எதிரான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேல் மீது தொடர்ந்து பாரிய தாக்குதல்களை நடத்தி வரும் லெபனானிய போராளிக் குழுவான “ஹிஸ்புல்லாஹ்வின்” தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.


ஹஸன் நஸ்ருல்லாஹ் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லாஹ் ராணுவம் சற்று முன்னாள் உறுதிப்படுத்திய அறிவிப்பு விடுத்துள்ளது.


Sunday, August 25, 2024

Admin

VIDEO: புத்தளத்திற்கு வந்த “குப்பை ட்ரைன்” - இளைஞர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.



இன்று (25) முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வனவாசல, குப்பை பொதி செய்யும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


756 இல இன்ஜினை கொண்ட புகையிரதத்தில் 20  கொள்கலன்களில் இந்த குப்பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள் வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


நூர் நகர் புகையிரத நிலையம் அருகே நேற்று மற்றும் இன்று பிற்பகல் இந்த குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.