Our Feeds


Friday, September 11, 2026

Zameera

உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு

 


ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது


இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது.


இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும்.


கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9 ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர் எல்லையைக் கடந்த நிலையில், அன்றிலிருந்து தொடர்ச்சியாக இவ்வாறு எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றது.


பிரெண்ட் எண்ணெய் விலை உயர்வுக்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 டொலராக உயர்ந்துள்ளது.


அத்துடன், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 டொலராகப் பதிவாகியுள்ளது.

Zameera

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்




 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 


மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். 


காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 


ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 


சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 


ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 


சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலையானது சுமார் (2.0 - 2.5) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Zameera

கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற FCID அழைப்பு

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று (10) முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.


அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 10, 2026

Zameera

யோஷித ராஜபக்ஷ வழக்கு: பொய் சாட்சியமளித்தவருக்கு எதிராக நடவடிக்கை

 


பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியமளித்த சாட்சி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 


இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகச் சாட்சியமளிப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 


இதன்படி, பொய் சாட்சியமளித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த சாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். 


அதனைத் தொடர்ந்து, அந்த சாட்சியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Zameera

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் - கைதானவர் விளக்கமறியலில்

 

80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


மருதானை பகுதியில் வைத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். 


இவர் 2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

Zameera

SLS முத்திரையின்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை: ரூ.4 இலட்சம் அபராதம்

 



இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) கட்டாய தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வடங்களை (Extension Cords) விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் பண்டாரவளைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 4 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட விசாரணை அதிகாரிகளால் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 


கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கட்டாய SLS தரச்சான்றிதழ் தேவைப்படும் மின் நீட்டிப்பு வடங்கள், SLS முத்திரை இன்றி 2,790 ரூபா விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது. 


அத்துடன் குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை (Warranty) வழங்காமை மற்றும் விநியோகஸ்தர்களின் சட்டப்பூர்வ பற்றுச்சீட்டுகள் இன்றி பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 


நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, பிரதிவாதியான நிறுவனத்திற்கு 400,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 


2017 டிசம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்ட 2048/39 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் 63ஆம் இலக்க கட்டளையின் கீழ், 250 வோல்ட்டுக்கு மிகையாத பல மின்சார சாதனங்களுக்கு கட்டாய SLS தரச்சான்றிதழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய சொக்கெட்டுகள் (Sockets), Socket Outlets, மின் நீட்டிப்பு கம்பிகள் (Extension Cords), அடாப்டர்கள், Fused Connection Units, மாற்றி பிளக்குகள் மற்றும் கேபிள் ரீல்கள் (Cable Reels) ஆகியவற்றிற்கு உரிய SLS தரச்சான்றிதழ் இருப்பது கட்டாயமாகும். 


மின் விபத்துக்கள் மற்றும் தீப்பற்றல்களைத் தவிர்ப்பதற்காக இவ்வாறான மின் சாதனங்களை வாங்கும் போது SLS தர முத்திரை மற்றும் உத்தரவாதக் காலத்தைப் பரிசோதித்து, சட்டப்பூர்வ பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

SHAHNI RAMEES

முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்த ACJU!

 

அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும்
SHAHNI RAMEES

4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது? - நாமல் கேள்வி!

 




சிறைச்சாலையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை

SHAHNI RAMEES

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற புதிய கட்டுப்பாடு!

 


வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கையில்

SHAHNI RAMEES

தெஹிவளை எபனைஸர் பள்ளிவாசல் விவகாரம்: வத்தளை இஸ்மதிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி!



தெஹிவளை  எபனைஸர் வீதியில் உள்ள ஆறு மாடிகள்

Zameera

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: செப்டம்பர் 24, 25இல் விவாதம்

 



22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 


பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 


இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அன்றைய தினங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

காலாவதியான ஸ்ட்ராபெரி கிரீம் பணிஸ் விற்பனை – பேக்கரி நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்

 நுகர்வோரைத் திசைதிருப்பும் வகையில் காலாவதியான பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.



நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 2026/04/16 என காலாவதித் திகதியிடப்பட்ட ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று (09)


இவ்வழக்கு கொழும்பு பிரதான பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, ​​குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனையடுத்து நீதவான் குறித்த நிறுவனத்திற்கு எதிராக 200,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் உற்பத்தித் திகதியையும் காலாவதித் திகதியையும் முறையாகச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பாகும் என்பதுடன், இதுபோன்று சட்டவிரோதமான முறையில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் நுகர்வோரிடம் கேட்டுக்கொள்கின்றன.