தெஹிவளை எபனைஸர் வீதியில் உள்ள ஆறு மாடிகள்
கொண்ட பள்ளிவாசல் ஒன்றிணை, வர்த்தகர் T L M இம்தியாஸ் ( weels lanka) என்பவர் தன் பெயரில் அபகரித்துள்ளார் என்ற காணொளி ஒன்றை ஹுனுப்பிட்டி இஸ்மத் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியிட்டிருந்தார்.இதனை அடுத்து வத்தலை ஹுனுப்பிட்டியைச் சேர்ந்த இஸ்மத்துக்கு எதிராக, பள்ளிவாசல் மூன்று நீதிமன்றங்களில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவற்றில் இரண்டு வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு சம்பந்தமாகவும்,ஒரு வழக்கு குறிப்பிட்ட காணொளியை இஸ்மத் அவர்கள் நீக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையிலும், நான்காவது வழக்கு நட்டஈடு கோரியும் இஸ்மத்துக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இன்று 9 ஆம் திகதி 9 ஆம் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்த கோட்டை நீதிமன்றம் இரண்டாவது வழக்கையும் மூன்றாவது வழக்கையும் தள்ளுபடி செய்தது.