Our Feeds


Thursday, November 12, 2026

ShortNews

ஸ்மார்ட் மின் மானிகள் இலவசமாக வழங்கப்படும்!


மாதாந்தம் 180 அலகுகளுக்கு (Units) மேல் பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களுக்கு மொத்தமாக 300,000 திறன்மிகு மின்மானிகள் (Smart meters) இலவசமாக வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 


பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 


ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Zameera

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு நாளை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக அறிவிப்பு

 

ருவான்வெலிசாய முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு நாளை (13) வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நேற்று (11) காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவு 02 இல் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.


உடமலுவ பொலிஸ் நிலையத்தின் ஊடாக தேரருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தர முடியாது என்றோ அல்லது வருகை தரப்போவதில்லை என்றோ தேரர் தரப்பில் எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை.


இதனையடுத்து, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி குறித்த வாக்குமூலத்தை வழங்குமாறு உடமலுவ பொலிஸார் மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளனர்


எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், தாம் எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் தம்மிடம் கையளிக்க முடியாது எனவும், தமக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் சங்க நீதிமன்றத்திற்கே உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ShortNews

சீரான மின் விநியோகத்திற்கு 26.5 பில்லியன் ஒதுக்கப்படும்!




சீரான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 26.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 


பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 


வீட்டுக்கூரையில் மின்சக்தி படலம் பொருத்தியுள்ள நுகர்வோருக்கு சேமிப்புக்கு மின்கலம் கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க ரூ. 350 மில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது.


 


நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 30 மெகாவோட் கொள்ளளவு கொண்ட மின்கலச் சேமிப்புத் தொகுதி நிறுவப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


 


சூரிய மின்கல இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 10% துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) நீக்கப்படவுள்ளது.

Zameera

ஜனாதிபதிக்கு அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு

 


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.


இந்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றுள்ளது.


இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்பது தனது பொறுப்பாகும் எனக் கூறினார்.


அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்காகச் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி, நிற பேதமின்றி இதற்காகத் தலையிட்ட அனைவருக்கும் விசேட நன்றிகள் உரித்தாக வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்


அனோஜன் சிவராசா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.


தமது மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதலே தலையிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட ரீதியான தலையீடுகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகல இலங்கையர்களுக்கும் அனோஜன் சிவராசாவின் தாயார் இதன்போது தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.


ஜனாதிபதியை முதன்முறையாகச் சந்தித்த சந்தர்ப்பத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக நன்றி தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், இதே காலப்பகுதியில் பங்களாதேஷ் தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தினால் அனோஜனின் பெற்றோர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.


மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ShortNews

சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!



இந்தியா - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்  என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பங்குடைமை ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் முயற்சிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ShortNews

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் திருத்தப்படும்!


முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 


அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமும் திருத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


 


பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

ShortNews

சகல சட்டங்களும் திருத்தப்படும், புதிய சட்டங்கள் இயற்றப்படும் -


பழைய சட்டங்களை வைத்துக் கொண்டு புதிய பொருளாதார பரிமாற்றத்தை அடைய முடியாது.

பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்புடன் தொடர்புடைய சகல சட்டங்களும் திருத்தப்படும், புதிய சட்டங்கள் இயற்றப்படும். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட  உரையை நிகழ்த்தி வருகின்றார்.

Zameera

மக்கா நோக்கி ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு!

 

யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களால் மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இரு பொலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாகவும், அவற்றின் சிதறல்கள் சபுஹா கிராமம் உள்ளிட்ட சில பகுதிகளில் விழுந்துள்ளதாகவும் சவூதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என சவூதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இன்று (12) வியாழக்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் கடுமையாகக் கண்டித்துள்ளது.


இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவைத் தாங்கள் ஒருபோதும் இலக்கு வைப்பதில்லை எனவும், சவூதியிலுள்ள இராணுவ மற்றும் மூலோபாய இலக்குகள் மீது மட்டுமே தமது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ஹூதி தரப்பினர் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். எனினும், நேற்று (11) புதன்கிழமை சம்பவம் குறித்து ஹூதிகள் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.


2022 ஆம் ஆண்டு ஐ.நா மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் தற்காலிகமாகத் தணிந்திருந்த மோதல்கள், இவ்வாண்டின் தொடக்கத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ஹூதிகள் சவூதி மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சவூதி அரேபியா யேமன் மீது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.



தற்போதைய மோதல் போக்கு காரணமாக, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழிப் பாதையான பாப் எல்-மண்டேப் நீரிணைப் போக்குவரத்துக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ShortNews

எரிபொருள் மானிய செலவு 147 பில்லியன்!




எரிபொருள் மானியங்களுக்காக அரசாங்கம்  147 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 


பாராளுமன்றில் வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 


மத்திய கிழக்கு நெருக்கடியில் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.


 


அதன் விளைவாக  மானியங்களுக்காக அரசாங்கம் இந்த தொகையை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ShortNews

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது - ஜனாதிபதி!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக 2008ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய விமான சேவை நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய அமைச்சரவையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இம்முயற்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாண்டு வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என நாடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ShortNews

உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட தாக்கம், பொருளாதாரத்திற்கு கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியது - ஜனாதிபதி!




மிகவும் சவாலான காலகட்டங்களில் ஒன்றின் போது பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்ட முடிந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை மற்றும் அதன் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட தாக்கம், நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த அழுத்தங்களிலிருந்து எம்மால் இன்னும் முழுமையாக மீண்டுவர முடியவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு துறைகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ShortNews

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் - சபாநாயகரின் அறிவிப்பு!


பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை உரிய திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ShortNews

2027 வரவு - செலவு திட்ட உரை ஆரம்பம்!


2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட  உரையை நிகழ்த்தி வருகின்றார்.

வரவு செலவு திட்ட உரையின் நேரலையினை கீழே உள்ள இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்.