டிலந்த:- இன்று உலகத்தில் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மையாக உள்ளனர்.
சரத் பொன்சேகா :- ஆம் உலகத்தில் சிங்களம் சிறுபான்மை இனம் தானே. அதில் என்ன மாற்றுக் கருத்து உள்ளது.
டிலந்த:- ஆம், ஆனால் இங்கும் நான் அவ்வாறு இருக்க முடியாதே. கள்ளத்தோணி போன்று நாம் மாறிவிட்டோம் என்பதே வருத்தமாக உள்ளது.
சரத் பொன்சேகா: கிறிஸ்தவ, முஸ்லிம் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுகின்றது என்று கூறுகின்றீர்கள். பெளத்த வளர்ச்சி இல்லை என்றால் அது எமது தவறு தானே ? எம்மால் ஆக்கிரமிப்புடன் சர்வதேச வேலைத்திட்டத்துடன் மோத முடியாது, புத்தரும் பெளத்த வளர்ச்சிக்காக தானே நாடு நாடாக சென்றார். பௌத்தத்தை வளர்ச்சி யின் பாதையில் கொண்டு செல்ல மாநாயக தேரர்கள் உள்ளனர். அதனால் தானே அவர்களை நம்புகின்றோம். இதற்கு உங்களின் அமைப்புகள் அவசியம் இல்லை. மேலும் தர்கா நகர் சம்பவம் பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. நீங்கள் பொறுப்புக்கூற வேண்டும், நீங்கள் கூறும் தர்க்கம் வேறு காரணியாக இருக்கலாம்.
