Our Feeds


Tuesday, July 23, 2019

www.shortnews.lk

அடிப்படைவாதத்தின் ஆபத்து சிகப்புத் தம்பிகளுக்கு விளங்குவதில்லை - ஞானசாரர்

 

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் இஸ்லாம் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவப்புத் தம்பிகள் மௌனம் சாதிப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்று (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
விசேடமாக மொரட்டுவ பல்கலைக்கழகம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றை இதற்கு முன்னுதாரணமாக குறிப்பிடலாம். இவற்றில் நடைபெறும் அடிப்படைவாத நடவடிக்கைகளை சாட்சியுடன் நிரூபிக்கலாம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
இந்தப் பல்கலைக்கழகங்களில் வஹாப் வாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேறு மாணவர் அமைப்புக்களுக்கும் இந்த விடயங்கள் தென்படுவதில்லை. மூச்சுக் குழாய்கள் சிவப்பாக இருக்கும் சிவப்புத் தம்பிகளுக்கு அவர்களது எதிர்காலம்தான் அழிந்துகொண்டிருப்பது விளங்குதில்லையெனவும் தேரர் மேலும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »