தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரான் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் தொடர்பில் விளக்கமளிக்க கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா த சில்வாவினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
