கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல்
டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு எதிரான கோஷ்டியினர் பெருமளவில் குழுமியிருந்தனர்.
நகரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாக்டர் ஷாபியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை கோரி
நின்றபோதும் எதிராளிகள் சார்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் டாக்டரை விடுதலை செய்ய அரச சட்டவாதிகள் எதிர்ப்பை
வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் தாய்மார்களின் சட்டத்தரணிகள் சி ஐ
டியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இரவு நேரங்களில் கூட அவர்கள்
தாய்மார்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினார்.
400 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்து
டாக்டருக்கு இருப்பதாக பிக்கு ஒருவர் கூறியுள்ளதை மறுத்த டாக்டரின் சட்டத்தரணிகள் , அப்படி
இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அந்த சொத்துக்கள் அனைத்தையும் விகாரைக்கு நண்கொடையாக
வழங்க டாக்டர் ஷாபி தயாரென்றும் மன்றில் குறிப்பிட்டனர்.
இன்றைய நீதிமன்ற விசாரணையையொட்டி நீதிமன்ற வளாகத்திலும்
குருநாகல் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மாலை 5.45
மணிக்கு பிணை தொடர்பான முடிவை நீதவான் அறிவிப்பதாக
இருந்தது. ஆனால் அது ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது.
