Our Feeds


Thursday, July 25, 2019

www.shortnews.lk

Dr ஷாபியை விடுவிக்க நீதி மன்றம் விதித்த கடும் நிபந்தனைகள் இவைதான்.

 


குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை பிணையில் விடுதலை செய்ய குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று மூன்றாவது தினமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீர பிணைகள் நான்கின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

வைத்தியர் ஷாபிக்கு பிணை வழங்குவதில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததை அடுத்து அவருக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »