சி. ஐ. டி. யிடம் வாக்குமூலம் அளிக்க அமைச்சர் ரவிக்கு நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஆணைக்குழுவுக்கு தவறான தகவல்களை வழங்கியமை சம்பந்தமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை இரு வாரங்களுக்குள் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு உத்தரவிட்டார்.
