2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவுடன் பரீட்சைக்குத் தோற்றுவதில் எந்தவித தடைகளும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
இது தொடர்பில் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பூகொட, நிட்டம்புவ மற்றும் வெலிமட உள்ளிட்ட சில பகுதிகளில் பர்தா அணிந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நேற்று (05) திங்கட்கிழமை கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து
கேட்டபோதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
