சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியம் ஒன்றை சட்டத்திற்கு முரணாக அஸாத் சாலி பௌண்டேஷனுக்கு பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளதாக நிதி மோசடிப்பிரிவு நீதி மன்றுக்கு அறுவித்துள்ளதாக சிங்கள தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுல்ளது.
சதொச நிறுவனத்தின் தலைவரின் பரிந்துரைக்கு அமைவாக மனித வள முகாமையாளர் இப்ராஹிம் என்பவர் இந்த களஞ்சியத்தை அஸாத் சாலி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளதாக நிதி மோசடி பிரிவு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
2018 ஆண்டு குத்தகை மற்றும் மின்சார கட்டணம் 34 லட்சத்து 44 ஆயிரத்து 257 ஷரூபா நிலுவையில் உள்ளதாக நீதி மன்றுக்கு நிதி மோசடி பிரிவினர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
